ADDED : அக் 16, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அருகே பெண் குழந்தை மூச்சு திணறல் காரணமாக இறந்தது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த செவ்வேரியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி மின்னல்கொடி. இவருக்கு கடந்த 37 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. நேற்று காலை 8:30 மணியளவில் குழந்தையை தொட்டிலில் துாங்க வைத்து, வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, மூச்சு திணறல் காரணமாக குழந்தை முணகுவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உடன், திட்டக்குடி அரசு மருத்துவனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
திட்டக்குடி போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.