/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்
/
குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்
ADDED : மார் 27, 2025 04:27 AM

கடலுார்: கடலுார் மாநராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கமிஷனர் அனு, துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி பேசும்போது, குழந்தைகள் கடத்தப்படுதல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், குழந்தைகளை தத்து வழங்குவதல், குழந்தை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு தவறாமல் அனுப்ப பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு காலம் தவறாமல் தடுப்பூசி போடுதல், உடல் நலம் காத்தல் போன்றவற்றிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுத்து உறுதி செய்திடல் வேண்டும் என பேசினார்.
கூட்டத்தில் தாசில்தார் பலராமன், குழந்தைகள் நலக்குழு இளங்கோவன், வாழ்த்துரை வழங்கினர். மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.