/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் கார்த்திகை தீபம் சிறுவர்கள் 'மாவளி' சுற்றி மகிழ்ச்சி
/
மாவட்டத்தில் கார்த்திகை தீபம் சிறுவர்கள் 'மாவளி' சுற்றி மகிழ்ச்சி
மாவட்டத்தில் கார்த்திகை தீபம் சிறுவர்கள் 'மாவளி' சுற்றி மகிழ்ச்சி
மாவட்டத்தில் கார்த்திகை தீபம் சிறுவர்கள் 'மாவளி' சுற்றி மகிழ்ச்சி
ADDED : டிச 04, 2025 05:26 AM

கடலுார்: மாவட்டத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவில்களில் சொக்கப்பனை ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது.
கார்த்திகை தீபம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்த கார்த்திகை மாதத்தின் முதல் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, கடலுார் மாநரில் பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசலில் முக்கிய பகுதிகளில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி சுவாமியை வழிபாடு செய்தனர். மஞ்சக்குப்பம் வினைதீர்த்த விநாயகர், உட்பட பல்வேறு கோவில்களின் முன்பு சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
சிறுவர்கள், இளைஞர்கள் மாவளி சுற்றி மகிழ்ந்தனர்.