
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் ; சிதம்பரம், வீனஸ் குழுமப் பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, வீனஸ் குழுமப் பள்ளிகளின் தாளாளர் வீனஸ் குமார் தலைமை தாங்கினார். 8ம் வகுப்பு மாணவி நதியா வரவேற்றார். தில்லை நகர் பள்ளியில் முதுகலை ஆசிரியர் சஞ்சிவிராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
துணைத் தாளாளர் ரூபியால் ராணி, முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் பொனிகலா பங் கேற்றனர். மாணர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 6 ம் வகுப்பு மாணவி வித்தியாலட்சுமி பரத நாட்டியம் ஆடிகொண்டே, ஓவியம் வரைந்தார். மாணவி பவதாரணி நன்றி கூறினார்.
மாணவர்கள் கோகுல் பிரசாத், பரணிதான், ஆசிரியை ஹரிப்பிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.