/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிராமணர் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா
/
பிராமணர் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா
ADDED : நவ 11, 2025 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார் மஞ்சக்குப்பம் கிளை சார்பில் குழந்தைகள் தின விழா நடந்தது.
கடலுாரில் நடந்த விழாவில், சங்க மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கி, மாநில சங்கம் அளித்த கல்வி உதவித் தொகையை 2 பெண் குழந்தைகளுக்கு வழங்கினார்.
கிளை பொதுச் செயலாளர் பரகால ராமானுஜம் வரவேற்றார். பொருளாளர் நரசிம்மன், அரிமா சங்க மாவட்ட தலைவர் வித்யாஸ்ரீ, ஆசிரியை கலைச்செல்வி வாழ்த்திப் பேசினர். ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு இளைஞரணி செயலாளர் ரவிச்சந்திரன் பரிசு வழங்கினர்.
சிறந்த ஓவியங்களை ஜவகர் சிறுவர் மன்ற ஓவிய ஆசிரியர் மனோகரன் தேர்வு செய்தார்.

