/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி தொகுதியில் ரூ.93 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் துவக்கி வைப்பு

ADDED : நவ 11, 2025 06:28 AM

நெய்வேலி: நெய்வேலி தொகுதி மாளிகாம்பட்டு, திருவாமூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ. 93 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நெய்வேலி தொகுதிக்குட்பட்ட மாளிகாம்பட்டு ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 11 லட்சம் மதிப்பில் சாலை, திருவாமூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சாலை, காட்டுக்கூடலுார் மற்றும் கீழ்காங்கேயன்குப்பம் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட கனிமவளத் திட்டத்தின் கீழ் தலா ரூ. 18 லட்சம் செலவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கருக்கை ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 21 லட்சம் மதிப்பில் சாலை சீரமைப்புப் பணிகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பி.டி.ஓ.,க்கள் மீரா, கோமதி, பாபு, பொறியாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், சந்தோஷ் குமார், துணை செயலாளர் சுமதி நந்தகோபால், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், ஒன்றிய தலைவர் நாமத்தேவன், பொருளாளர் ராஜசேகர், மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.