/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தார்சாலை அமைத்து தர சின்னுார் மக்கள் கோரிக்கை
/
தார்சாலை அமைத்து தர சின்னுார் மக்கள் கோரிக்கை
ADDED : ஜன 30, 2024 05:52 AM
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த சின்னுார் வடக்கு கிராமத்தில், கடற்கரைக்கு செல்லும் மண் சாலையை, தார் சாலையாக அமைத்துத்தர, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம தலைவர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் அனுப்பியுள்ள மனு:
பரங்கிப்பேட்டை அடுத்த வடக்கு சின்னுார் கிராமத்தில் மீனவர்கள் மற்றும் இருளர் என, சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கிராமத்தில் இருந்து கடற்கரை வரையில், மீனவர்கள் வசதிக்காக மண் சாலையை தார்சாலையாக அமைத்து தர, கிராம மக்கள் கோரிக்கை ஏற்று, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முன்வந்தனர்.
ஆனால், அந்த சாலையில், 250மீட்டர் நீளம், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், தடையில்லா சான்று கேட்டனர்.
வனத்துறை அதிகாரிகள் அந்த இடத்தை சர்வே செய்து கொடுத்தால் தடையில்லா சான்று வழங்குவதாக தெரிவித்தனர். அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் இருந்து சர்வே அதிகாரிகள் வரவைக்கப்பட்டு சர்வே செய்து வனத்துறை அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது.
ஆனால், வனத்துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் வழியாக மூன்று கி.மீட்டர் துாரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது.
எனவே, சின்னுார் வடக்கு கிராமத்தில் இருந்து கடற்கரைக்கு செல்ல தார் சாலை அமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூற்பபட்டுள்ளது.