/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர திட்டம் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர திட்டம் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர திட்டம் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர திட்டம் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : டிச 18, 2024 05:46 AM
சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு நிரந்தர தடுப்பு திட்டம் தேவை என, வி.சி., கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.
சிதம்பரத்தில் அவர் அளித்த பேட்டி:
ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கும். இளையராஜா விவகாரத்தில் தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். காட்டுமன்னார்கோவில் பகுதியில் 30 செ.மீ., வரை மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
வீராணத்தில் இருந்து வெள்ளியங்கால் ஓடையில் தண்ணீர் திறக்கப்பட்டதால், பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளம் ஏற்பட்டது. 100 சதவீதம் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவை பேரிடர் பகுதியாக அறிவித்து அனைத்து நிவாரண உதவிகளையும், குடும்பத்திற்கு 5 ஆயிரம் நிவாணம் வழங்க வேண்டும்.
தமிழக அரசு குழு அனுப்பி வெள்ள பாதிப்பை ஆய்வு செய்து, புதிதாயக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் இரு பக்கத்திலும் நீர் வழி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.தொடர் பாதிப்புகளை களைய நிரந்தர திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசியலில் வெறுப்பை விதைக்கும் போக்கு உள்ளது. அந்த வகையில் ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக ஒரு பாடலும் வெளியாகி இருக்கிறது.
இதை வைத்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த படைப்பாளி இசைவாணி மீது கொடூர தாக்குதல் நடந்திருக்கிறது.
மணிப்பூரில் நடந்ததைவிட மோசமான கொடுமை அவர் மீது தொடுக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு ஜாதி அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் செயல்படுபவர்களை ஒரு சிறப்பு புலனாய்வு பிரிவை உருவாக்கி கண்காணிக்க வேண்டும்.
நிலத்திற்கு மேல் வரும் நீரை கணகாணிக்க நீர்வளத்துறை உள்ளது. அதேபோல் நிலத்தடி நீர் மட்டத்தை கண்காணிக்கும் வகையில், தனி ஆணையம் அமைக்க வேண்டும் தொடர்ந்து சட்டமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். எனவே, தமிழக அரசு உடனடியாக நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க தனி ஆணையம்அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.