ADDED : ஏப் 21, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்::
குடிபோதையில் நடந்து சென்றவர், கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தார்.
விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி,40; இவர் நேற்று முன்தினம் குடிபோதையில், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து, வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது, பி.வி.ஜி., தியேட்டர் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில், நிலைதடுமாறி தலைகுப்புற கீழே விழுந்து இறந்தார்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.