/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.கே., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அசத்தல்
/
சி.கே., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அசத்தல்
ADDED : மே 09, 2025 12:20 AM

கடலுார்: கடலுார் சி.கே., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
கடலுார் சி.கே.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் நவீன்ராஜ் 600க்கு 592 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம், கடலுார் வட்டார அளவிலும் சிறப்பிடம் பிடித்தார். மாணவர்கள் அனிஷ்கண்ணா 583 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் இரண்டாமிடம், சித்தார்த் 583 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
பாட வாரியாக கணிதத்தில் 8 பேர், வேதியியலில் 2 பேர், கணினி அறிவியலில் 10 பேர், உயிரியலில் 2 பேர், கணினி பயன்பாடு பாடத்தில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். இப்பள்ளி இக்கல்வியாண்டில் பிளஸ் 2 வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. சாதனை மாணவ, மாணவிளை பள்ளி நிர்வாக இயக்குனர் அமுதவள்ளி ரங்கநாதன், முதல்வர் திவ்யாமேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.