/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துாய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு பேரணி
/
துாய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 23, 2024 07:36 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் நகராட்சி சார்பில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 'துாய்மையே சேவை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை, நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் துவக்கி வைத்தார். துப்புரவு அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் வரவேற்றார்.
இதில், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் ஆறுமுகம், முத்தமிழ்செல்வன், வேல்முருகன், ரவிச்சந்திரன், களபணி உதவியாளர் செங்குட்டுவன், துாய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள்,பரப்புரையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், வானொலி திடல் இருந்து நகராட்சி அலுவலகம் வரை துாய்மை குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நகராட்சிஊழியர்கள் உர்வலமாக சென்றனர். முன்னதாக, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.