தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுார் சில்வர் பீச்சில் துாய்மை பணி

கடலுார் சில்வர் பீச்சில் துாய்மை பணி

கடலுார் சில்வர் பீச்சில் துாய்மை பணி


ADDED : மார் 10, 2024 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2024 04:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் மத்திய கடல் பொருள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடற்கரை துாய்மை பணி நடந்தது.

மேம்பாட்டு ஆணைய இணை இயக்குனர் அன்சர் அலி தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்மூர்த்தி முன்னிலை வகித்தார். குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் அரசு கலைக்கல்லுாரி பேராசிரியை சிவகாமசுந்தரி பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கவுரையாற்றினார்.

இதில், கல்லுாரி மாணவர்கள் சில்வர் பீச்சில் குப்பைகளை சேகரித்து துாய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் ராமன், கடலோர காவல் படை அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us