ADDED : ஜூலை 04, 2026 09:03 PM

அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: -: கெங்கைகொண்டான் பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளில் துாய்மை பணி மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது.
பொதுமக்களின் சுகாதார நலன் கருதி, டெங்கு மற்றும் மலேரியா போன்ற காய்ச்சல் பரவுவதைத் தடுக்க கெங்கைகொண்டான் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியில் துாய்மை பணியாளர்கள் ஈடுப்பட்டனர்.
மேலும் கெங்கைகொண்டான் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி, துப்பரவு ஆய்வாளர் முகமது யாசிக் உள்ளிட்டோர் குடியிருப்பு பகுதிகளில் துப்பரவு பணி, வடிகால்கள், குப்பைகள் அகற்றும் பணி, தெருவிளக்கு உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து துப்பரவு பணியாளர்களுக்கு நோய் தடுப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
