ADDED : ஜூலை 04, 2026 09:01 PM
அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்: சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த ஓமாம்புலியூர் மெயின்ரோடு சங்கர் மகன் ராம்குமார் 24; கூலித்தொழிலாளி. இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, வெளியூர் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, ராம்குமாரை கைது செய்தனர்.
