/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துாய்மையே சேவை திட்டம்: திட்டக்குடியில் துவக்கம்
/
துாய்மையே சேவை திட்டம்: திட்டக்குடியில் துவக்கம்
ADDED : செப் 19, 2024 11:43 PM

திட்டக்குடி: மத்திய அரசின் துாய்மையே சேவை திட்டத்தின் கீழ், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதாரப்பணிகள் துவங்கியது.
மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், துாய்மையே சேவை திட்டம் கடந்த 15ம் தேதி துவங்கியது. இந்த இயக்கம், காந்தி ஜெயந்தி தினமான அக்.2ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதனடிப்படையில், நேற்று திட்டக்குடி அரசு மருத்துவமனையில், துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தலைமை மருத்துவர் சேபானந்தம் துவக்கி வைத்தார். திட்டக்குடி நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கோபி, ரஜினி, கார்த்திகேயன், சிவசங்கர், கலைவாணன், பரமேஸ்வரி, கலாவதி, சிவநந்தினி, அருள்ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.