/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிராம சேவை மையத்தில் துணிகள் திருட்டு
/
கிராம சேவை மையத்தில் துணிகள் திருட்டு
ADDED : நவ 02, 2025 03:49 AM

பெண்ணாடம்: கிராம சேவை மையத்தை திறந்து மகளிர் சுய உதவிக்குழுவினர் வைத்திருந்த துணிகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணாடம் அடுத்த இறையூர் ஊராட்சி, கிராம சேவை மையத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வாழ்வாதார சேவை மையம் செயல்படுகிறது.
இச்சேவை மையம் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு இறையூர், பெ.பொன்னேரி, கூடலுார் கிராம மகளிர் சுய உதவி குழுவினர் மஞ்சப்பை மற்றும் மகளிர் ஆடைகள் தயாரித்தல், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கடன் வழங்குதல் உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சேவை மையத்தை பெண்கள் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை 10:00 மணியளவில் வழக்கம்போல் வந்து பார்த்தபோது மையத்தின் பூட்டு திறக்காமல் கதவு திறந்த நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது பெண்களுக்கு ஆடைகள் தைக்க வாங்கிய புதிய துணிகள், மின்விசிறி திருடு போயிருப்பது தெரிந்தது. பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

