/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி ஆலோசனை கூட்டம்
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 02, 2025 03:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கடலுாரில் நடந்தது.
ஆர்.டி.ஓ., சுந்தரராஜன் தலைமை தாங்கினார். தாசில்தார் மகேஷ் முன்னிலை வகித்தார்.
வரும் 4ம் தேதி வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணி துவங்க உள்ளது.
இதற்காக வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்காக வரும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது.
வாக்காளர் பட்டியல் தொடர்பாக, அரசியல் கட்சிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

