/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது
/
சிறுமி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது
ADDED : நவ 02, 2025 03:40 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே சாக்காங்குடி, தெற்கு தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் அருண்ராஜ், 34; திருமணமாகாதவர்.
நேற்று முன்தினம் மாலை அருண்ராஜ் குடிபோதையில், சாலையில் நடந்து சென்ற, 16 வயது சிறுமி ஒருவரை வலுக்கட்டாயமாக துாக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு, சிறுமியை மீட்டு, 108 ஆம்புலன்சில் ஏற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து அருண்ராஜை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

