/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சர்வே துறையில் ஓடியஜீப் பகிரங்க ஏலம்
/
சர்வே துறையில் ஓடியஜீப் பகிரங்க ஏலம்
ADDED : நவ 02, 2025 03:39 AM
கடலுார்: கடலுார் மாவட்ட நிலஅளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநரின் அலுவலக பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மகேந்திரா ஜீப் வாகனம் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க பொது ஏலம் விடப்பட உள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் அரசு நிர்ணயித்துள்ள தொகையில், 10 சதவீதம் முன் பிணைத்தொகை வரைவோலையாக, அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆப் சர்வே அண்டு லேண்ட் ரெக்கார்ட்ஸ், கடலுார் பெயருக்கு செலுத்த வேண்டும்.
குறிப்பிட்ட காலத்திற்கு பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதிக தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும். அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக கோரப்படின் ஏலம் ரத்து செய்யப்பட்டு, வேறு தேதியில் நடத்தப்படும்.
ஏலம் எடுத்தவர் உடன் பணம் செலுத்தி பின் பொருளினை எடுத்து செல்ல வேண்டும்.
ஏலம் எடுத்தவர் தொகை செலுத்தாத பட்சத்தில் முன் பிணைத்தொகை மீள வழங்கப்படாது. ஏலம் எடுத்தவர் நீங்கலாக மற்றவர்களின் முன் பிணைத்தொகை மீள வழங்கப்படும்.
இந்த ஏலத்தை ரத்து செய்வதற்கு, நிறுத்தி வைக்க, முடித்து வைப்பதற்கு துறை தலைவருக்கு முழு அதிகாரம் உண்டு.
ஏலம் எடுப்பவர் அரசு நிர்ணயித்துள்ள அடிப்படையில் ஜி.எஸ்.டி., தொகையினை செலுத்த வேண்டும். ஏலம் எடுப்பவரின் ஆதார் அட்டை நகல் மற்றும் ஜி.எஸ்.டி., எண் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

