/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூச்சிக்கொல்லி குடித்து பெண் தற்கொலை
/
பூச்சிக்கொல்லி குடித்து பெண் தற்கொலை
ADDED : நவ 02, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: குடும்ப பிரச்னை காரணமாக பூச்சிக்கொல்லி குடித்து, பெண் இறந்தார்.
பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரவேல். இவரது, மனைவி சிலம்பரசி, 27; மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 30ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக, சிலம்பரசி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உடன், அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

