/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி ஆலோசனை கூட்டம்
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 02, 2025 03:38 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா தலைமை தாங்கினார். தாசில்தார் அரவிந்தன் முன்னிலை வகித்தார்.
தேர்தல் கணினி இயக்குனர் சுரேஷ், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில், தி.மு.க., அ.திமு.க., பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ., காங்., உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் நிலைய அலுவலர்கள் வரும்போது, அரசியல் கட்சிகளின் நிலை முகவர்கள் உடன் சென்று அவர்களுக்கு உதவ வேண்டும்; வாக்காளர்கள் அதே இடத்தில் வசிக்கின்றனரா அல்லது வேறு இடத்தில் வசித்தால், அவர்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு வந்து, வாக்களிப்பாளர்களா என்பதை உறுதிபடுத்த வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

