/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோ ஆப்டெக்சில் தள்ளுபடி விற்பனை துவக்கம்
/
கோ ஆப்டெக்சில் தள்ளுபடி விற்பனை துவக்கம்
ADDED : நவ 12, 2024 06:49 AM

கடலுார்: கோ ஆப்டெக்ஸ் கடலுாரில் உள்ள முல்லை விற்பனை நிலையத்தில் நேற்று மெகா சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கவிழா நடந்தது.
கடலுார் மண்டல மேலாளர் சுப்ரமணியன், துணை மண்டல மேலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். ரெட்கிராஸ் இயக்குனர் இளங்கோவன், கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி உதவி பேராசிரியை ஸ்ரீதேவி, ஓய்வுபெற்ற ஆசிரியை ஜோதி, வழக்கறிஞர் சித்ரா ஆகியோர், தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தனர்.
கோ ஆப்டெக்ஸ் முல்லை விற்பனை நிலைய மேலாளர் விமல்ராஜ், விஜயசங்கர் மற்றும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.
இந்த விற்பனையில் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையிலான மெகா சிறப்பு தள்ளுபடி விற்பனை, நவ., 11ம் தேதி முதல் நவ., 30ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்த காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபுவனம் பட்டுசேலைகள், மென் பட்டுசேலைகள் மற்றும் அனைத்து விதமான பருத்திசேலைகள், சுடிதார் ரகங்கள், படுக்கை விரிப்புகள், வேட்டிகள், துண்டுகள், லுங்கிகள், பருத்தி சட்டைகள் போன்ற அனைத்து ரகங்களையும் வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்பெறலாம் என கோஆப்டெக்ஸ் மேலாளர் தெரிவித்தார்.