UPDATED : அக் 14, 2026 04:18 PM
ADDED : அக் 14, 2026 04:06 PM
அ நிறம் | அளவு
பெண்ணாடம்: கொத்தட்டையில் மின்னல் தாக்கியதில், தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.
பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியில் நேற்று பகல் 12:00 மணியளவில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்தது. அப்போது, கொத்தட்டை இந்திரா நகரைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது வீட்டின் தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தை மின்னல் தாக்கியது.
அதில், தென்னை மரம் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரித்தனர்.
