ADDED : மே 19, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே சித்தேரியில் வயல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் மாற்றியை உடைத்து காயிலை திருடிச்சென்றவரை போலீசார் தேடிவருகின்றனர்.
புவனகிரி அருகே சித்தேரியில் வயல் பகுதியில் மின் மாற்றி அமைத்து அப்பகுதியில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் மாற்றியை உடைத்து மர்ம நபர்கள் அதில் இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான காயிலை திருடிச்சென்றனர்.
இது குறித்து மின் துறை ஊழியர் குணசேகரன் என்பவர் உதவி மின் பொறியாளர் ரவிக்கு தகவல் தெரிவித்தார். ரவி புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.