/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
6 லட்சம் பனை விதைகள் மாவட்டத்தில் சேகரிப்பு
/
6 லட்சம் பனை விதைகள் மாவட்டத்தில் சேகரிப்பு
ADDED : அக் 09, 2024 06:24 AM

விருத்தாசலம் : வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, நீர்நிலைகளில் நடும் வகையில் 6 லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டன.
வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி, நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தி, நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளில் தலா 1,000 பனை விதைகள் வீதம் 6 லட்சத்து 83 ஆயிரம் பனை விதைகளை சேகரித்து, வரும் 10ம் தேதி நடப்பட உள்ளன.
அதன்படி, கடலுார், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகள் தோறும் பனை விதைகள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. அந்தந்த பி.டி.ஓ.,க்கள் மேற்பார்வையில் தரம் வாய்ந்த பனை விதைகள் சேகரிக்கப்பட்டன.
நாளை 10ம் தேதி மாவட்டம் முழுவதும் பனை விதைகள் நடும் விழா நடக்க உள்ளதால், நேற்று வரை 6 லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. நாளை கலெக்டர் தலைமையில் நடைபெறும் விழாவில், அந்தந்த ஊராட்சி ஒன்றிய மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சித் தலைவர்கள் முன்னிலையில் பனை விதைகள் நடப்பட உள்ளன.