/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
/
கடலுார் பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : நவ 10, 2024 04:44 AM

கடலுார் : கடலுார் பஸ் நிலையத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், புதுச்சேரி, பெங்களூரு, திருப்பதிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் இப் பஸ் நிலையத்தை நேற்று காலை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாநகராட்சி கமிஷனர் அனு, தாசில்தார் பலராமன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பஸ் நிலையத்தில் நடக்கும் திட்டப் பணிகளை பார்வையிட்டகலெக்டர், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள நடைபாதை கடைகளை அகற்ற உத்தரவிட்டார்.
மேலும் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.