/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய வகுப்பறை கட்டடம் கலெக்டர் திறந்து வைப்பு
/
புதிய வகுப்பறை கட்டடம் கலெக்டர் திறந்து வைப்பு
ADDED : அக் 30, 2025 11:19 PM

கடலுார்:  செம்மங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
கடலுார் அடுத்த செம்மங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயோனியர் ஜெல்லைஸ் நிறுவன சமூக பொறுப்பு நிதி 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஸ்மார்ட் போர்டுடன் கூடிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து பேசினார்.
பயோனியர் ஜெல்லைஸ் நிறுவன துணைத் தலைவர் ஒளி சந்திரன்  முன்னிலை வகித்தார்.
விழாவில், கல்வித் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், பயோனியர் ஜெல்லைஸ் நிறுவன துணை பொதுப் மேலாளர்கள் பிரபாகரன், யேசுரத்தினராஜ், முரளி, விஜயகுமார், அதிகாரிகள் விக்னேஷ், ராஜசேகர் பங்கேற்றனர்.

