sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அங்கன்வாடியில் முன்பருவ கல்வி வழங்கும் பணி : கலெக்டர் துவக்கி வைப்பு

/

அங்கன்வாடியில் முன்பருவ கல்வி வழங்கும் பணி : கலெக்டர் துவக்கி வைப்பு

அங்கன்வாடியில் முன்பருவ கல்வி வழங்கும் பணி : கலெக்டர் துவக்கி வைப்பு

அங்கன்வாடியில் முன்பருவ கல்வி வழங்கும் பணி : கலெக்டர் துவக்கி வைப்பு


ADDED : நவ 04, 2025 01:36 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், செம்மண்டலம் அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் பெற்றோர் தன்னார்வலர்களை கொண்டு முன்பருவ கல்வி வழங்கும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

பிறப்பு முதல் 72 மாதம் வரை உள்ள குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கில் ஊட்டச்சத்து குறைபாடில்லாத தமிழ்நாட்டினை உருவாக்கிட ஊட்டச்சத்தினை உறுதிசெய் எனும் திட்டத்தின் மூலம் தினந்தோறும் ஆரோக்கியமான உணவுகள் தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வண்ண சீருடைகளும் வழங்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறும்போது;

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கடலுார் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் மொத்தம் 2023 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வரு கின்றன.

இங்குள்ள மழலையர்களுக்கு அடிப்படை கல்வியினை சிறந்த முறையில் வழங்கிட மாவட்ட நிர்வாகத்துடன் கலிக்கே டாடா தொண்டு நிறுவனம் இணைந்து சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் பெற்றோர் தன்னார்வலர்களைக் கொண்டு முதற்கட்டமாக 140 அங்கன்வாடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இங்கு 2 முதல் 5 வயதுக்குட்பட்ட 2,100 முன்பருவக்கல்வி பெறும் குழந்தைகளுக்கு நவம்பர் 2025 முதல் செப்டம்பர் 2026 வரை வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.

அங்கன்வாடி மையங்களில் சிறந்த முறையில் வழங்கப்படும் அடிப்படை கல்வியின் மூலம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது எவ்வித பயமும், தயக்கமுமின்றி தொடக்க கல்வியினை எளிதாக எதிர்கொள்ள முடியும்.

இத்திட்டம் படிப்படியாக அனைத்து மையங்களிலும் செயல் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அனிதா, கலிக்கே டாடா அறக்கட்டளை தொழில்நுட்ப அலுவலர் ஆஷிஷ், தன்னார்வல பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us