/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: வீடுவீடாக கணக்கெடுப்பு படிவம் வழங்க முடிவு
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: வீடுவீடாக கணக்கெடுப்பு படிவம் வழங்க முடிவு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: வீடுவீடாக கணக்கெடுப்பு படிவம் வழங்க முடிவு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: வீடுவீடாக கணக்கெடுப்பு படிவம் வழங்க முடிவு
ADDED : நவ 04, 2025 01:36 AM
கடலுார்: கடலுார் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் இன்று முதல் வீடு வீடாக வழங்கப்பட உள்ளன.
இது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
கடலுார் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 07.02.2026 வரை நடக்கிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் இன்று முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, 04.12.2025 அன்றுக்குள் மீண்டும் பெறப்படும்.
அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும் படிவங்களை, வாக்காளர்கள் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பத்துடன், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மீண்டும் வரும்போது சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். எனவே, வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், இப்பணி தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின், கடலுார் கலெக்டர் அலுவலகம் 1950, திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதி 04143-255249, விருத்தாசலம் தொகுதி 04143-238289, நெய்வேலி 04142-241741, பண்ருட்டி 04142-241741, கடலுார் 04142-295189, குறிஞ்சிப்பாடி 04142-258901, புவனகிரி 04144-240299, சிதம்பரம் 04144-227866, காட்டுமன்னார்கோயில் (தனி) 04144-262053 ஆகிய பிரத்யேக தொலைபேசி எண்களை வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

