/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வளர்ச்சி திட்டப் பணிகள் கலெக்டர் ஆய்வு
/
வளர்ச்சி திட்டப் பணிகள் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 05, 2025 03:32 AM
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
காட்டுமன்னார்குடி அடுத்த மாமங்கலம் ஊராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்று நாற்றங்கால் பண்ணையை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
பின், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் அகரபுத்துார்-மணவெளி கிராமங்களிடையே 10.08 கோடி ரூபாய் மதிப்பில் சாலை பணிகள், 19.77 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் கட்டுமான பணியை ஆய்வு செய்து, அதிகாரிகள் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, சித்தமல்லி ஊராட்சியிலும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறுகையில், 'கடலுார் மாவட்டம் முழுதும் பசுமை போர்வையை அதிகரிக்கும் வகையில் பல லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய மாமங்கலத்தில் மரக்கன்று நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வளர்க்கப்படும் மரக்கன்றுகள் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை மூலம் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வளர்க்கப்படும்.
நடப்பு ஆண்டில் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு 223 வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது' என்றார்.