தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பண்ருட்டியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் அதிரடி ஆய்வு

பண்ருட்டியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் அதிரடி ஆய்வு

பண்ருட்டியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் அதிரடி ஆய்வு


UPDATED : அக் 17, 2026 12:00 AM

ADDED : அக் 16, 2026 04:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 12:00 AM ADDED : அக் 16, 2026 04:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி வளர்ச்சி பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.

பண்ருட்டி நகராட்சி பஸ் நிலையத்தில் ரூ.4.70 கோடி செலவில் நடைபெற்று வரும் கடைகள் கட்டுமான பணி மற்றும் கான்கரீட் தரைத்தளம் பணியை கலெக்டர் சிபிஆதித்யாசெந்தில்குமார் நேற்று பார்வையிட்டார். ஆய்வின்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமையில் வியாபாரிகள் பஸ்நிலைய புதிய கடைகள் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் கலெக்டர், அம்மா உணவகத்தில் உணவுகளை ருசி பார்த்தார். தொடர்ந்த, துாய்மை இந்தியா திட்டத்தில் ரூ. 13.40 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டட பணியை ஆய்வு செய்த பின், பூங்குணம் ஏரியில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

ஆய்வின்போது, கமிஷ்னர் காஞ்சனா, உதவி பொறியாளர் கார்த்திகேயன், பி.டி.ஒ.க்கள் சங்கர், மீராகோமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us