/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாநகராட்சியில் பகுதியில் ரூ.34.28 கோடியில் வளர்ச்சி பணிகள் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
/
கடலுார் மாநகராட்சியில் பகுதியில் ரூ.34.28 கோடியில் வளர்ச்சி பணிகள் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
கடலுார் மாநகராட்சியில் பகுதியில் ரூ.34.28 கோடியில் வளர்ச்சி பணிகள் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
கடலுார் மாநகராட்சியில் பகுதியில் ரூ.34.28 கோடியில் வளர்ச்சி பணிகள் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 11, 2025 08:30 PM

கடலுார்; கடலுார் மாநகராட்சி பகுதிகளில் 34.28 ரூபாய் கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வர் முதல்வர் பொதுமக்களின் வளர்ச்சிக்காகவும் மேன்மைக்காகவும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கடலுார் மாவட்டத்திற்கு வருகை தந்த போது அறிவித்த திட்டத்தின் படி கடலுார் மாநகராட்சி பகுதிகளில் வணிக வளாகம் மற்றும் மஞ்சுகுப்பம் மைதானம் சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் கடலுார் மாவட்டத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்த சுப்பராயலு பூங்காவில் மீன் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த பணிகள் தற்போது நடந்து வருகிறது.
கடலுார் மஞ்சக்குப்பத்தில் 5.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்துவரும் அண்ணா மார்க்கெட் கட்டுமான பணி, குண்டு சாலை பகுதியில் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வரும் நகராட்சி மண்டலஅலுவலகம் பணி, செம்மண்டலத்தில் 0.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் சிமென்ட் சாலை பணியை ஆய்வு செய்தார்.
மேலும் மஞ்சக்குப்பம் சுப்புராயலு பூங்கா மேம்பாட்டு பணி, மஞ்சக்குப்பம் பகுதியில் 2.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்துவரும் வணிக வளாகம் கட்டுமான பணி, கே.கே. நகர். சிமென்ட் சாலை பணிகளை ஆய்வு செய்தார். கடலுார் வெள்ளி கடற்கரையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நெய்தல் பூங்கா, வன்னியர்பாளையம் பகுதியில் நடந்து வரும் நகர்புற நல வாழ்வு மையம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் கட்டுமான பணி, சரவணா நகர் மண்டல அலுவலக பணிகள், முதுநகர்,சுனாமி நகர் , சிங்காரத்தோப்பு பகுதியில் கட்டப்படும் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி, முதுநகர் பகுதியில் மண்டல அலுவலகம் பணிகளை ஆய்வு செய்தார்.
கடலுார் முதுநகர் பகுதியில் 5.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தவச்சலம் மார்க்கெட் கட்டுமான பணி நடைபெறுவதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை விரைந்து முடித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் அனு, மாநகராட்சி பொறியாளர் கோவிந்தராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.