/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் ஏரியில் படகு குழாம் அமைக்க இடம்: கலெக்டர் ஆய்வு
/
வீராணம் ஏரியில் படகு குழாம் அமைக்க இடம்: கலெக்டர் ஆய்வு
வீராணம் ஏரியில் படகு குழாம் அமைக்க இடம்: கலெக்டர் ஆய்வு
வீராணம் ஏரியில் படகு குழாம் அமைக்க இடம்: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 22, 2025 12:44 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியில் படகு குழாம் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
சோழத்தரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் வீராணம் ஏரியின் மேற்கு கரையான புடையூரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் படகு குழாம், சுற்றுலா தளம், பூங்கா அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, சோழத்தரம் ஊராட்சியில் கலைஞர் வீடுகட்டும் திட்ட பணிகள் ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கட்டடத்தின் மேல்கூரை பழுதடைந்துள்ளதை அகற்றி புதிதாக அமைக்க வேண்டும் என்றார். வலசக்காடு ஊராட்சியில் மரக்கன்று உற்பத்தி செய்யும் இடத்தை ஆய்வு செய்தார்.
டி.ஆர்.ஓ., ராஜசேகரன்,சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., தாசில்தார் இளஞ்சூரியன், ஊரக வளர்ச்சி திட்ட உதவி இயக்குனர் முருகன், பி.டி.ஓ.,க்கள் வீராங்கன், செந்தில்வேல்முருகன் உடனிருந்தனர்.