/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பம் உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் ஆய்வு
/
நெல்லிக்குப்பம் உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் ஆய்வு
நெல்லிக்குப்பம் உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் ஆய்வு
நெல்லிக்குப்பம் உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் ஆய்வு
ADDED : டிச 27, 2024 11:05 PM

நெல்லிக்குப்பம்,: நெல்லிக்குப்பம் நகராட்சி மேல்பாதியில் உள்ள தனியார் அன்பு இல்லம் மற்றும் வாழப்பட்டு வின்னர் மனவளர்ச்சி குன்றியோருக்கான உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஆய்வு செய்தார்.
அங்கு தங்கியுள்ளவர்களிடம் சுகாதாரம், உணவின் தரம்,அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தங்கியுள்ளவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். தரமாக உணவு வழங்க வேண்டும். சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
கலெக்டர் வந்திருப்பதை அறிந்த வாழப்பட்டு மகாலட்சுமி நகர் உட்பட பல நகர்களின் மக்கள் தெருவிளக்கு இல்லாததால் அடிக்கடி திருட்டு நடப்பதாக புகார் கூறினர். உடனடியாக தெருவிளக்குகள் போட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கமிஷனர் கிருஷ்ணராஜன், தாசில்தார் ஆனந்த்,இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.