ADDED : நவ 28, 2024 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: பெருமாள் ஏரியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அந்த வகையில் குறிஞ்சிப்பாடி அருகே மிகப்பெரிய ஏரிகளின் ஒன்றான பெருமாள் ஏரி நிரம்பி வருகிறது. தற்போது வீனாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் வருகிறது.
இந்நிலையில், நேற்று, ஏரியை கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஏரியின் நீர்வரத்து, இருப்பு குறித்து கேட்டறிந்து, தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ராமன், பணி ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.