/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊரக வளர்ச்சி துறையில் திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
/
ஊரக வளர்ச்சி துறையில் திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
ஊரக வளர்ச்சி துறையில் திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
ஊரக வளர்ச்சி துறையில் திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 14, 2025 07:16 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி துறையின் வாயிலாக மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் கனவு இல்லம் திட்டம் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், இதுவரை இத்திட்டங்களின் கீழ் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளின் நிலை, வெவ்வேறு நிலைகளிலுள்ள வீடு கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும் கேட்டறியப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 15வது நிதி குழு மானியம், துாய்மை பாரத இயக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக கிராம ஊராட்சிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு, கிராம ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கு தல் குறித்து ஆய்வு நடந்தது.
மேலும் திட, திரவ கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரப்பணிகள், கிராமப்புற நுாலகம் அமைத்தல், பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடங்களை சீரமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல், சுடுகாடு வசதிகள் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கிராமப்புறங்களில் எம்.பி., தொகுதி மேம்பாட்டுத் திட்டம், சட்டசபை தொகுதி மேம்பாடு உள்ளிட்ட அனைத்துத் திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் பிரியங்கா, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) வரதராஜபெருமாள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

