/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுார், குறிஞ்சிப்பாடியில் கலெக்டர் ஆய்வு
/
வடலுார், குறிஞ்சிப்பாடியில் கலெக்டர் ஆய்வு
ADDED : டிச 29, 2025 05:54 AM
வடலுார்: வடலுார், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியல் எஸ்.ஐ.ஆர் முகாம்களை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:
கடலுார் மாவட்டத்தில், 9 சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து, 19.46 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
குறிஞ்சிப்பாடி வட்டத்தில், குறிஞ்சிப்பாடி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் எஸ்.ஐ.ஆர் முகாம்கள் பட்டியல் அடிப்படையில் நடத்தப்படுகின்றன.
மேலும், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மற்றும், புகைப்படம் மாற்றம் ஆகியவற்றிற்கு, www.eci.gov.in/electors மற்றும், www.voters.eci.gov.in ஆகிய இணையதளங்களில் சமர்ப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் விசாரணை நடத்தி வரும், பிப்., 17ம் தேதி வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். தனித்துணை கலெக்டர் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், தாசில்தார் விஜய் ஆனந்த் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

