/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சமுதாய திறன் பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்று
/
சமுதாய திறன் பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்று
சமுதாய திறன் பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்று
சமுதாய திறன் பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்று
ADDED : டிச 29, 2025 05:54 AM
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சமுதாய திறன் பள்ளிகளில் நடத்தப்பட்ட தொழில் பயிற்சியினை முடித்தவர்களுக்கு கலெக்டர் பயிற்சி சான்றிதழினை வழங்கினார்.
கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்கான மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தால் சமுதாய திறன் பள்ளிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமுதாய திறன் பள்ளிகள் வாயிலாக, அனுபவமிக்க முதன்மை பயிற்றுனர்கள் மற்றும் உள்ளூர் நிபுணர்கள் தங்கள் சொந்த கிராமங்களில் உள்ள சமுதாய உறுப்பினர்களுடன் தங்கள் கள அறிவை நேரடியாகப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் பழுதுபார்ப்பு பராமரிப்பு, இயக்கும் வேலை, தொழில்பிரிவு, தையல் இயந்திர பழுது மற்றும் பராமரிப்பு, அழகு நிலைய மேலாண்மை, ஆரி எம்பிராய்டரி, இரு சக்கர வாகன பழுது பார்க்கும் வேலை, கட்டட வேலை, நான்கு சக்கர, டிராக்டர் பழுது பார்க்கும் வேலை, இரும்புக் கம்பி வலைத்தல், இலகு வாகன ஓட்டம், டைல்ஸ், கிரானைட் பதிப்பு வெட்டும், மேம்படுத்தும் வேலை, உள்ளிட்ட 30 தொழில் பிரிவுகளின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நடப்பு ஆண்டில், மாநிலம் முழுதும் 2,500 சமுதாய திறன் பள்ளிகள் மூலம் 50, ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
கடலுார் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் உள்ள கிராமப்புறங்களில் 18 முதல் 45 வயதுடைய, 150 சமுதாய திறன் பள்ளிகள் மூலம் 3 ஆயிரம் பயனாளிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதில் இதுவரை 63 சமுதாய திறன் பள்ளிகளில் 1,260 பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பயிற்சி முடித்த 57 பயனாளிகளுக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பயிற்சி சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர், மகளிர் திட்டம் ஜெய்சங்கர், உதவி திட்ட அலுவலர் ராஜேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

