/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் ஆய்வு
/
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் ஆய்வு
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் ஆய்வு
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 25, 2025 07:02 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில், கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விருத்தாசலம் சேமிப்பு கிடங்கில், திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்து நெல் மூட்டைகள் நனைந்து முளைப்பு விட்டுருந்தன. இதுசம்பந்தமாக செய்தி நாளிதழ், ஊடகங்களில் நேற்று வெளியானது.
இதன் தொடர்ச்சியாக விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் கூறுகையில், மாவட்டத்தில் குறுவை பட்டத்தில் 199 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந் து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, குறுவை பட்டம் முடியும் நிலையில் உள்ளதால், 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் 9,750 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்க முடியும். தற்போதுவரை மார்க்கெட் கமிட்டியில் 6,699 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது பருவமழை பெய்து வருவதால், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டு, மார்க்கெட் கமிட்டியில் இருப்பு வைக்கும் பணி நடக்கிறது.மேலும், மழையில் நனைந்த நெல் மூட்டைகள் அரவைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தார்பாய் கொண்டு மூட்டைகளை மூடி பாதுகாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
ஆய்வின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மாவட்ட மண்டல மேலாளர் கமலம், துணை மேலாளர் விஸ்வநாதன், மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

