/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
/
சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : டிச 12, 2024 08:07 AM

மந்தாரக்குப்பம்; கெங்கைகொண்டான் பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திடீர் ஆய்வு செய்தார்.
கெங்கைகொண்டான் பேரூராட்சி எஸ்.பி.டி.எஸ்., நகரில் என்.எல்.சி., சி.எஸ்.ஆர்., நிதியில் 15 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் அங்கான்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நோயாளிகளின் பரிசோதனை அறை, தினமும் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவ சிகிச்சை முறைகள், கர்ப்பிணி கால சேவைகள் குறித்து டாக்டரிடம் கேட்டறிந்தார்.
புற நோயாளிகளின் பதிவேடுகள், கழிவறை, ஆய்வகத்தை ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
ஆய்வின் போது டாக்டர் பூங்கொடி, பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி, பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ், இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் மாலாசதீஷ்குமார், பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

