/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அக்.,2ல் மதுக்கடைகள் மூட கலெக்டர் உத்தரவு
/
அக்.,2ல் மதுக்கடைகள் மூட கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 29, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்,: கடலுார் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினமான அக்., 2ம் தேதி மதுக்கடைகள் மூட வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழக அரசின் உத்தரவுபடி, காந்தி ஜெயந்தி தினமான அக்., 2ம் தேதி கடலுார் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து எப்.எல்- 1-டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக் கூடங்களை மூட வேண்டும். மீறி, மதுபானக் கடை மற்றும் மதுபானக் கூடங்களை திறந்து விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் எப்.எல்- 2, எப்.எல்- 3, உரிமைதாரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.