/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., மீட்பு பணி கலெக்டர் பாராட்டு
/
என்.எல்.சி., மீட்பு பணி கலெக்டர் பாராட்டு
ADDED : டிச 15, 2024 08:57 AM

நெய்வேலி : என்.எல்.சி., நிறுவனம் சார்பில், கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால், மாவட்டத்தின் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கை ஏற்று, வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் என்.எல்.சி., நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
என்.எல்.சி.,யின் சிறப்பு குழுவினர், கடலுாரில் கே.என் பேட்டை மற்றும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளிலும் வெள்ள நீரை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த மோட்டார் பம்புகள பயன்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கை ஏற்று, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவாக தலா 10 ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கியும், மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதியில் தண்ணீர் வெளியேற்ற உதவியும் வரும் என்.எல்.சி., நிறுவனத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.