/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
/
திட்டக்குடி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : மார் 19, 2025 09:29 PM
திட்டக்குடி; கல்லுாரி மாணவிகளுக்கிடையே நடந்த கட்டுரை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த திட்டக்குடி அரசு கல்லுாரி மாணவியை கலெக்டர் பாராட்டினார்.
பெண்ணாடம் அடுத்த எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியா. திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகளிர் விடுதியில் தங்கி, பி.ஏ., தமிழ், முதலாமாண்டு படித்து வருகிறார்.
சமீபத்தில், மாவட்ட அளவில் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கிடையே நடந்த கட்டுரை போட்டியில் 2ம் இடம் பெற்றார். மாணவி சத்தியாவை கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் பாராட்டி, பரிசு வழங்கினார். தொடர்ந்து, மாணவியை கல்லூரி முதல்வர் ராஜசேகர், தமிழ்த்துறை விரிவுரையாளர்கள் மற்றும் விடுதி காப்பாளர் பாராட்டினர்.