/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காலநிலை மாற்றத்திற்கான மேம்பாட்டு பயிற்சி: மரக்கன்றுகளை நட கலெக்டர் வலியுறுத்தல்
/
காலநிலை மாற்றத்திற்கான மேம்பாட்டு பயிற்சி: மரக்கன்றுகளை நட கலெக்டர் வலியுறுத்தல்
காலநிலை மாற்றத்திற்கான மேம்பாட்டு பயிற்சி: மரக்கன்றுகளை நட கலெக்டர் வலியுறுத்தல்
காலநிலை மாற்றத்திற்கான மேம்பாட்டு பயிற்சி: மரக்கன்றுகளை நட கலெக்டர் வலியுறுத்தல்
ADDED : ஏப் 23, 2025 10:34 PM
கடலுார்:
காலநிலை மாற்றத்திற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கடலுாரில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:
தமிழக முதல்வரால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்திடவும், எதிர்வரும் காலங்களில் காலநிலையினை சீராக்கிடும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகரங்களில் காற்றின் மாசு கணக்கீடு மற்றும் சுத்தமான, சுகாதாரமான வாயு குறிக்கோளுக்கான திட்டங்கள்.
கார்பன் வாயுக்களின் தாக்கங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, பசுமை ஆற்றல் திட்டங்கள் குறித்தும் பருவநிலை மாற்றத்திற்கேற்ற வேளாண் முறைகள், இயற்கை விவசாய முறைகள் மூலம் விவசாயத்தில் நிலைத்தன்மையை பெறும் வழிகள். பசுமை கட்டிட உத்திகள் மற்றும் கட்டுமானத்தில் நிலைத்தன்மை குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மட்டுமன்றி, அனைத்து அரசுத் துறைகளும் வளங்களை பாதுகாக்கும் திட்டங்களின் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் அனைத்து துறைகளும் மரகன்றுகளை அதிக அளவில் நட வேண்டும்.
இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து வாழ்வில் மேன்மையடையலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் குருசாமி, புதுச்சேரி ஆரோவில் கன்சல்டிங் நிறுவனத்தை சேர்ந்த அரவிந்தன் மற்றும் ராகவ் நந்தகுமார், விருதாச்சலம் கிருஷி விஜ்ஞான் கேந்திராவை சேர்ந்த காயத்ரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

