தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கால்நடை உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கால்நடை உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கால்நடை உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை


ADDED : நவ 03, 2024 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2024 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார் : சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.

கடலுார் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டு பகுதிகளிலும் வாகன போக்குவரத்திற்கு இடையூறாகவும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அபராதாம் விதிக்கப்பட்டு வருகிறது.

பிடிக்கப்படும் கால்நடைகள், காப்பகத்திற்கு கொண்டு செல்லப்படுவதுடன், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கால்நடை வளர்ப்பு உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை தங்களுக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டும்.

பிடிக்கப்படும் கால்நடைகள் எக்காரணம் கொண்டும் திரும்பி வழங்கப்பட மாட்டாது. கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும், கால்நடைகளுக்கு உரிமைக் கோரி வருபவர்கள் மீது அபராதம் அல்லது சிறைதண்டனை விதிக்க காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, கால்நடைகள் வளர்க்கும் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரித்து மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us