/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெடிமருந்து சாப்பிட்டு கல்லுாரி மாணவி தற்கொலை
/
வெடிமருந்து சாப்பிட்டு கல்லுாரி மாணவி தற்கொலை
ADDED : நவ 08, 2025 02:19 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த பெரியகோட்டிமுளை வீரப்பன் மகன் சஹானா, 16; சேலம் மகா பாரதியார் பொறியியல் கல்லுாரி யில் பொறியியல் முதலாமாண்டு மாணவி. விடுதியில் தங்கி படித்த இவர், கடந்த ஒரு வாரமாக வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டு வேலைகளை செய்யவில்லை என அம்மா திட்டியதால் மனமுடைந்த மாணவி, தீபாவளிக்கு வாங்கியதில் மீதமிருந்த பட்டாசு வெடி மருந்துகளை இணைத்து, அதனை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். வெடிமருந்து சாப்பிட்டு மாணவி பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

