ADDED : நவ 08, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த நக்க வந்தன் குடி உடையார் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் அஜித், 19; இவர், புத்துார் அருகே உள்ள கல்லுாரியில் படிக்கிறார்.
இவர், அதே கல்லுாரியில் படிக்கும், 19 வயது மாணவியுடன், ஓராண்டுக்கும் மேலாக, நெருக்கமாக பழகி வந்தார். இந்நிலையில் மாணவி கர்ப்பமானார்.
இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அஜித் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

