/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரி மாணவி கர்ப்பம்; வாலிபர் மீது போக்சோ வழக்கு
/
கல்லுாரி மாணவி கர்ப்பம்; வாலிபர் மீது போக்சோ வழக்கு
கல்லுாரி மாணவி கர்ப்பம்; வாலிபர் மீது போக்சோ வழக்கு
கல்லுாரி மாணவி கர்ப்பம்; வாலிபர் மீது போக்சோ வழக்கு
ADDED : ஏப் 19, 2025 06:40 AM
கடலுார்; கடலுார் அருகே 17வயது கல்லுாரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது கடலுார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த சேடப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜீவா,22. இவர் கடலுார் பகுதியைச் சேர்ந்த 17வயது கல்லுாரி மாணவியை கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு கல்லுாரி மாணவி உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து அவரை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்ற ஜீவா, மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமான நிலையில், அவர் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவி அளித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார், ஜீவா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.