ADDED : அக் 21, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: குடும்ப பிரச்னையால் கல்லுாரி மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் செம்மண்டலம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் வடிவேல் மனைவி சித்ரா, 44; இவரது 18 வயது மகள் தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரை குடும்ப பிரச்னை தொடர்பாக, சித்ரா கண்டித்துள்ளார்.
இதனால், மனமுடைந்த இளம்பெண் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
புகாரின்பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.