ADDED : டிச 09, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கல்லுாரி மாணவி மாயமானது குறித்து, புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மகள் யுவஸ்ரீ, 18; தனியார் கல்லுாரி மாணவி. நேற்று காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்ற யுவஸ்ரீ, மாலை வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

